பாலக்கோடு | பிப்ரவரி 06:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 23 முதல் 27 வரை திருவிழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பந்தகால் நடும் விழா மற்றும் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன் மூலம் அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் ஊரின் முக்கிய பிரமுகர்கள், அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், மேலும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பூஜைகளில் பங்கேற்று வழிபாடு செய்தனர். வரும் நாட்களில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
.gif)

.jpg)