Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊராட்சியில்” நிகழ்ச்சி; 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.


நல்லம்பள்ளி
 | பிப்ரவரி 06:


தருமபுரி கிழக்கு மாவட்டம், தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் – பாலஜங்கமானஅள்ளி ஊராட்சியில்உங்களைத் தேடி உங்கள் ஊராட்சியில்” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் என்.பி. பெரியண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மற்றும் ஆ. மணி எம்.பி. கலந்து கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.


மேலும், தருமபுரி முன்னாள் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் மற்றும் தருமபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, தருமபுரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் எம்.பி. கௌதம், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சந்தோஷ்,
மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் வெங்கட்ராமன், ஒன்றிய அவைத்தலைவர் வீரமணி, பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யா, ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை, மேலும் சார்பு அணிகளின் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், BLA-2, BLC நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வரும் தேர்தலை முன்னிட்டு ஊராட்சி வாரியாக செய்ய வேண்டிய பணிகள், மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies