Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டத்திற்கு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, பிப்.18:
 


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள அருள்மிகு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, 25.02.2026 (புதன்கிழமை) அன்று பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், 07.03.2026 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உள்ளூர் விடுமுறை, Negotiable Instruments Act, 1881 (செலாவணி முறிச்சட்டம், 1881)ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. எனவே, வங்கிகள் மற்றும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு இது பொதுவிடுமுறையாக அமலாகாது.


உள்ளூர் விடுமுறை நாளான 25.02.2026 அன்று, பாலக்கோடு சார்நிலைக் கருவூலம் அரசு பாதுகாப்பு மற்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தேவையான அலுவல் பணிகளை மேற்கொள்ள இதனை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies