பாலக்கோடு | பிப். 12:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.6.37 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. சுகாதார இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக கனிமவள நிதி திட்டம் மூலம் ரூ.6.37 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திட்டப்பணியை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன், மருத்துவர்கள், செவிலியர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)