தருமபுரி | பிப்ரவரி 12:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 என்பது பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாக இருப்பதாகவும், இத்தொகையால் வாழ்க்கை நடத்த இயலாத நிலை இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே, மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500-இல் இருந்து குறைந்தபட்சம் ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)