Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ சீர் வரிசை வழங்கினார்.



பாலக்கோடு | பிப்ரவரி 12:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி சமுதாய கூடத்தில், பாலக்கோடு ஒன்றியத்தைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீ சுகந்திரியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீமந்தம் சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வளையல், புடவை மற்றும் ஏழு வகையான உணவுப் பொருட்கள் வழங்கி வாழ்த்துகளும் ஆசிகளும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை அலுவலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேல், அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், நகர செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies