Type Here to Get Search Results !

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி.


தருமபுரி | பிப்ரவரி 13:


தருமபுரி மாநகரில் 1980ஆம் ஆண்டு 3.97 ஏக்கர் பரப்பளவில் ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையமும், 1996ஆம் ஆண்டு நகர பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டன. இவ்விரு நிலையங்களின் மொத்த பரப்பளவு 34,720 சதுர மீட்டர் (8.57 ஏக்கர்) ஆகும்.


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு பொதுமருத்துவமனை, மாவட்ட கல்வி அலுவலகம், மின்சார அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை, சிவில் சப்ளைஸ் துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களை எளிதில் அணுகும் வகையில் இப்பேருந்து நிலையங்கள் மையப்பகுதியில் அமைந்துள்ளன.


இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் கடந்த 05.02.2026 அன்று திறக்கப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அனைத்து பேருந்துகளும் அங்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 09.02.2026 முதல் திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை, அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கான சில பேருந்துகள் தற்காலிகமாக நகர பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இது நிரந்தரத் தீர்வாக அமையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்து மாற்றத்தால் வியாபாரிகளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நகராட்சிக்கும் ஆண்டிற்கு சுமார் ரூ.6 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies