Type Here to Get Search Results !

பெல்ரம்பட்டி நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகள் 3 மாதங்களாக அவதியுறும் வாகன ஓட்டிகள்.


பாலக்கோடு | பிப்ரவரி 13:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் இருந்து பெல்ரம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை மூலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ஸ்தூபிமைதானம் முதல் கல்கூடப்பட்டி வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ள இப்பணிகள், கடந்த மூன்று மாதங்களாக மந்தகதியில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


சாலை விரிவாக்கப் பணிக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி சுற்றுப்புற மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் பெரும் அவதியுறுகின்றனர். மேலும், சாலை அடைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயணித்து வருவதால், போக்குவரத்து சிரமம் அதிகரித்துள்ளது.


நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ள நிலையில், விரைந்து முடிக்கக் கூடிய பணிகள் மந்தமாக நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies