Type Here to Get Search Results !

நாகாவதி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு; இதன் மூலம் 1993 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.


பென்னாகரம் | பிப்ரவரி 16:


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாகாவதி அணையிலிருந்து 2025–26 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் போக புன்செய் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலையில் இன்று (16.02.2026) தண்ணீர் திறந்து வைத்தார்.


அரசு ஆணைப்படி, 16.02.2026 முதல் 26.05.2026 வரை 100 நாட்களுக்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும்.

  • முதல் 5 நாட்கள் – முதல் மண்டலம்

  • அடுத்த 5 நாட்கள் – இரண்டாம் மண்டலம்

  • பின்னர் 5 நாட்கள் – தண்ணீர் நிறுத்தம்

இவ்வாறு மொத்தம் 7 நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கனஅடி தண்ணீர் தலைமை மதகின் வழியாக திறக்கப்பட உள்ளது.


இந்த பாசன நீர் வழங்குதலால் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை கிராமங்களில் மொத்தம் 1993 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத் துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies