தருமபுரி, பிப்.16:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (16.02.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 638 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:
-
சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள்
-
பட்டா வழங்குதல், சிட்டா பெயர் மாற்றம்
-
புதிய குடும்ப அட்டை வழங்குதல்
-
வாரிசு சான்றிதழ்
-
வேலைவாய்ப்பு கோரிக்கை
-
இலவச வீட்டுமனை பட்டா
-
முதியோர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவித்தொகைகள்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட குடியரசு தின மற்றும் பாரதியார் தின கபாடி போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் வாலிபால் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற தருமபுரி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி தே. சாந்தி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)