தருமபுரி – பிப்ரவரி 07:
இந்திய தேர்தல் ஆணையம் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (06.02.2026) தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சில வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அருகிலேயே வேறு வாக்குச்சாவடிகள் உள்ளதால், அந்த வாக்குச்சாவடிகளுக்கு மாற்றம் செய்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், சில வாக்குச்சாவடிகள் இயங்கும் கட்டடங்கள் பழுதடைந்துள்ள நிலையில், அதே வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டடத்திற்கோ அல்லது அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி கட்டடத்திற்கோ மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
-
17 வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட சில பிரிவு வாக்காளர்கள், அதே வளாகத்தில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
-
34 வாக்குச்சாவடிகளுக்கு புதிய கட்டடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
-
9 வாக்குச்சாவடிகள் அருகிலுள்ள அரசு கட்டடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். வாக்காளர்களுக்கு வசதியான, பாதுகாப்பான வாக்குப்பதிவு நடைமுறையை உறுதி செய்யும் நோக்கில் இந்த மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
.gif)

.jpg)