தருமபுரி, பிப்.23:
தருமபுரி மாவட்டத்தில் 01.01.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்க திருத்தம் (SIR–2026) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) வெளியிடப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார்.
இறுதி பட்டியலின்படி, தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,24,647 பேர், பெண்கள் 6,15,311 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 150 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1,596 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் விபரம்:
057 – பாலக்கோடு: 2,37,476
058 – பென்னாகரம்: 2,46,293
059 – தருமபுரி: 2,57,939
060 – பாப்பிரெட்டிப்பட்டி: 2,54,658
061 – அரூர் (தனி): 2,43,742
சிறப்பு சுருக்க திருத்தம் 19.12.2025 முதல் 30.01.2026 வரை நடைபெற்றது. இந்த காலத்தில் புதிய வாக்காளர்களாக 47,352 பேர் சேர்க்கப்பட்டதுடன், 11,161 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு திருத்தப்பட்ட பட்டியலில் 36,191 புதிய வாக்காளர்கள் (3.01%) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 வயது நிறைவடைந்த தகுதியான இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளவும், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ இணையதளம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் https://dharmapuri.nic.in/election/ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் எளிதாக மேற்கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விழிப்புணர்வை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)
.jpg)