Type Here to Get Search Results !

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம்; திறப்புவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி | பிப்ரவரி 03 :


தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதை தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.39.44 கோடி மதிப்பீட்டில் தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.


இந்த புதிய பேருந்து நிலையத்தில்,

  • தரைதளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ATM மையம்,

  • பொருட்கள் பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேரக் காப்பாளர் அறை,

  • தாய்மார்கள் பாலூட்டும் அறை,

  • பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வு அறைகள்,

  • 55 பேருந்துகள் நிறுத்தும் வசதி,

  • நடைபாதைகள், பயணிகள் அமரும் இடங்களில் டைல்ஸ் பதிக்கும் பணிகள்,

  • பிரதான சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.


ஆய்வின்போது, பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.


இந்த ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் திரு.சேகர், தருமபுரி நகர மன்ற தலைவர், போக்குவரத்து மேலாளர் திரு.க.செல்வம், மேலும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies