Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி | பிப்ரவரி 14:


தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. மணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் எழுச்சியுரை ஆற்றி, மாநில அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கூட்டணியின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விளக்கினார்.


இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பி.என்.பி. இன்பசேகரன், தருமச்செல்வன், தருமபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, எம்.பி. கௌதம், முல்லை ரவி உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies