Type Here to Get Search Results !

கெரகோடஅள்ளியில் ரூ.17.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை; கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ பணிகளை தொடங்கி வைத்தார்.


தருமபுரி | பிப்ரவரி 17:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் ஒன்றியம் கெரகோடஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பிரதான் மந்திரி கஞ்சி சேஷார கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


இந்த புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்ட பின், சிறுவர் வளர்ச்சி மற்றும் முன்பள்ளி கல்வி சேவைகள் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவு, ஆரம்பக் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.


இந்நிகழ்வில் அதிமுகவின் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரவிசங்கர், அம்மா பேரவை இணை செயலாளர் பெரியசாமி, சேலம் மண்டல ஐடி விங் துணை தலைவர் சாந்தகுமார், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜீம்.முருகன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies