Type Here to Get Search Results !

தருமபுரி அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தருமபுரி | பிப்ரவரி 17:


தருமபுரி நகரில் உள்ள குமாரசாமிபேட்டை, வெளிப்பட்டைத் தெரு, அனசாகரம், கடைவீதிப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து அங்காளம்மன் திருக்கோவில்களிலும் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலில் திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சக்தி கரகம் அழைத்தல், தீமிதித்தல், பொங்கல் வைத்தல், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் அருள்மிகு ஸ்ரீ தாண்டவேஸ்வரர் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடைபெற்றது.


விழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளை பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அழகு குத்தி, விமான அலகில் அந்தரத்தில் தொங்கியபடி கோவிலிலிருந்து மயானம் வரை சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பின்னர் இரவு நேரத்தில் கண்ணாடி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தருமபுரி நகரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies