Type Here to Get Search Results !

தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தருமபுரியில் ஆட்சியர் உணவு வழங்கி, டிபன் பாக்ஸ் வழங்கினார்.


தருமபுரி | பிப்ரவரி 09:


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (09.02.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி KPJ மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக ஒளிப்பரப்பப்பட்ட தொடக்க நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். பின்னர், தருமபுரி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும், காலை உணவு பெறுவதற்கான டிபன் பாக்ஸ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.


தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியிலும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, டிபன் பாக்ஸ்களை வழங்கினார்.


இதனையடுத்து, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அவர்கள் வாசிக்க, அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மனிதனை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாய வேலை, கடன் பிணையத் தொழில் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர மன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன், நகராட்சி ஆணையர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ், கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் ம. இராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள்–முன்னாள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies