Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி | பிப்ரவரி 14:


தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நலத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:

🔹 விலையில்லா சீருடைகள்
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை – 93,230 மாணவர்கள்

🔹 விலையில்லா காலணிகள்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை – 47,549 மாணவர்கள்

🔹 விலையில்லா புத்தகப் பைகள்
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை – 1,48,706 மாணவர்கள்

🔹 வரைப்பட நூல்கள்
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை – 17,233 மாணவர்கள்

🔹 கிரையான்கள்
1 மற்றும் 2 ஆம் வகுப்பு – 14,385 மாணவர்கள்

🔹 கணித உபகரணப் பெட்டிகள்
6 மற்றும் 9 ஆம் வகுப்பு – 28,311 மாணவர்கள்

🔹 பூட்ஸ் மற்றும் காலுறைகள் (2 செட்)
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை –
• பூட்ஸ் – 75,228 மாணவர்கள்
• காலுறைகள் – 1,40,784

🔹 விலையில்லா மிதிவண்டிகள்
11 ஆம் வகுப்பு – 12,608 மாணவர்கள்

🔹 பாடப்புத்தகங்கள்
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை – 1,48,876 மாணவர்கள்

🔹 நோட்டு புத்தகங்கள்
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை – 1,23,739 மாணவர்கள்



இந்த நலத்திட்டங்கள் மூலம் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை தொடர ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். கல்வி சமத்துவத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies