Type Here to Get Search Results !

⚠️ எச்சரிக்கை : தருமபுரியில் போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து எச்சரிக்கை தகுதி பெற்ற மருத்துவர்களையே அணுக வேண்டும்; மாவட்ட ஆட்சியர் அறிவுரை.


தருமபுரி | பிப்ரவரி 11:


தருமபுரி மாவட்டத்தில் B.V.Sc (Bachelor of Veterinary Science) படிக்காத சிலர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக, 30.01.2026 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.


அரசு விதிகளின்படி, B.V.Sc பட்டம் பெற்றும், Tamil Nadu State Veterinary Council-இல் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கத் தகுதியுடையவர்கள். இதற்கு மாற்றாக, போலி கால்நடை மருத்துவர்கள் அல்லது பாரம்பரிய வைத்தியர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது சட்டவிரோதமாகும்.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கால்நடை வளர்ப்போர் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவர்களை அல்லது அரசு கால்நடை மருத்துவ நிலையங்களை மட்டுமே அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும், தகுதி இல்லாத நபர்களிடம் சிகிச்சை பெறுவது கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தாக அமைவதுடன், பொருளாதார இழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்பதால், விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies