Type Here to Get Search Results !

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் 2-வது நாளாக தொடர் மறியல் போராட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் கைது.


தருமபுரி | பிப்ரவரி 11:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், இரண்டாவது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டத்தில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 என்பது பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவு என்றும், இத்தொகையால் வாழ்வாதாரம் நடத்த இயலாத நிலை உள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.


எனவே, மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,500-இல் இருந்து குறைந்தபட்சம் ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தொடர்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies