Type Here to Get Search Results !

தருமபுரியில் 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி நலத்திட்ட உதவிகள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


தருமபுரி – பிப்ரவரி 05:


தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் மூலம் நலத்திட்டப் பயன்கள் வழங்கிய நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (04.02.2026) கலந்து கொண்டு, 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 10 வட்டாரங்களில் அமைந்துள்ள கிராமப் பஞ்சாயத்துகளில், 2025 ஜூலை 15 முதல் 2025 அக்டோபர் 9 வரை மொத்தம் 176 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த 176 முகாம்களில், 1,90,312 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் இதர திட்டங்களையும் சேர்த்து 1,31,904 மனுக்கள் ஏற்கப்பட்டு, உரிய தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்ச்சியில்,

  • சமூக பாதுகாப்புத் திட்டம்

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

  • எரிசக்தித் துறை

  • கூட்டுறவுத் துறை

  • உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

  • வேளாண்மை – உழவர் நலத்துறை

  • சமூக நலத்துறை


உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.காயத்ரி (தருமபுரி), திரு.செம்மலை (அரூர்), தருமபுரி நகராட்சி ஆணையர் இரா.சேகர் உள்ளிட்ட அலுவலர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies