பென்னாகரம், பிப். 18:
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், ஐ.ஏ.எஸ்., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி, ஏரியூர் மற்றும் பெரும்பாலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 4 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாப்பாரப்பட்டியில், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல்துறை குழுவினர் இணைந்து மளிகை, பெட்டி, பீடா கடைகள் மற்றும் பேக்கரிகளில் சோதனை நடத்தினர்.
தருமபுரி சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள அடுத்தடுத்த இரண்டு பீடா கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
இரு கடைகளுக்கும் 30 நாட்கள் செயல்பட தடை
-
தலா ரூ.50,000 அபராதம்
-
கடைகள் உடனடியாக மூடப்பட்டது
ஏரியூர் நாகமரை மெயின் ரோட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
30 நாட்கள் கடை இயங்க தடை
-
ரூ.50,000 அபராதம்
இந்த மூன்று கடைகளும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்ட கடைகள் என்பதால், இரண்டாம் முறையாக சிக்கியதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் பெரும்பாலை காவல் நிலைய வரம்பில் மேச்சேரி சாலையில் உள்ள சிறிய பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
14 நாட்கள் கடை இயங்க தடை
-
ரூ.25,000 அபராதம்
உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து கடையை மூடி, அபராதச் சலானை வழங்கி எச்சரிக்கை செய்தனர்.
-
3 கடைகள் – தலா ரூ.50,000 (மொத்தம் ரூ.1,50,000)
-
1 கடை – ரூ.25,000
-
மொத்த அபராதம்: ரூ.1,75,000
-
4 கடைகள் தற்காலிகமாக மூடல்
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)