Type Here to Get Search Results !

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் – வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வயது வரம்பு உயர்வு, விண்ணப்ப தேதி நீட்டிப்பு.


தருமபுரி, பிப். 18:
 


தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNRLM) கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 7 வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தருமபுரி, நல்லம்பள்ளி, அரூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் ஏரியூர் ஆகிய வட்டாரங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.


இந்நிலையில்,

  • வயது வரம்பு 30 இலிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

  • விண்ணப்பிக்கும் கடைசி தேதி 20.02.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கல்வித் தகுதி

  • ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Graduate in any discipline)

  • MS Office-ல் குறைந்தது 3 மாத பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
    அல்லது

  • கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மேலும், சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் பணி திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயது மற்றும் அனுபவம்

  • 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

  • சுய உதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்

  • இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம்


முக்கிய நிபந்தனைகள்

  • காலிப்பணியிடம் உள்ள வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

  • நிர்வாக நிதி முறைகேடு அல்லது பிற காரணங்களால் முந்தைய

    • தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

    • புது வாழ்வுத் திட்டம்

    • IFAD திட்டம்

    • பிற மாநில அரசுத் திட்டங்கள்

இவற்றிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்க இயலாது.


விண்ணப்பிக்கும் முகவரி

திட்ட இயக்குநர் / இணை இயக்குநர்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
முதல் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
தருமபுரி – 636705


விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். தகுதி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies