Type Here to Get Search Results !

TNPSC Group-II & Group-IIA முதன்மை எழுத்துத் தேர்வு; தருமபுரியில் 665 பேர் பங்கேற்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி | பிப்ரவரி 06:


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (Group-II & Group-IIA Services) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (08.02.2026) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. முற்பகல் தேர்வில் 323 தேர்வர்களும், பிற்பகல் தேர்வில் 342 தேர்வர்களும் என மொத்தம் 665 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


தேர்வு மையத்தில் தேர்வர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, மின்வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், தேவையான இடங்களில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி,

  • முற்பகல் தேர்வு – காலை 08.30 மணி முதல் 08.59 மணி வரை

  • பிற்பகல் தேர்வு – பிற்பகல் 01.30 மணி முதல் 01.59 மணி வரை
    இந்த நேரங்களில் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.


தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்தை அடையவும், கடைசி நேர அலைச்சலை தவிர்க்கவும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக வாசித்து கடைபிடிக்கவும் ரெ.சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies