தருமபுரி | பிப்ரவரி 06:
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 10.02.2026 (செவ்வாய்கிழமை) அன்று தேசிய குடற்புழு நீக்க நாள் (National Deworming Day) கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நாளில் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்,
-
அங்கன்வாடி மையங்கள்
-
அரசு பள்ளிகள்
-
அரசு உதவி பெறும் பள்ளிகள்
-
தனியார் பள்ளிகள்
-
கல்லூரிகள் (ITI, பாலிடெக்னிக் உள்ளிட்டவை)
என்ற அனைத்து கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படும்.
10.02.2026 அன்று தவறவிட்ட குழந்தைகளுக்காக 17.02.2026 (செவ்வாய்கிழமை) அன்று சிறப்பு முகாம் (Mop-up Day) நடத்தப்படும். அன்றைய தினத்தில் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் மாத்திரை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில்,
-
3.94 லட்சம் குழந்தைகள் (1–19 வயது)
-
1.00 லட்சம் பெண்கள் (20–30 வயது)
என மொத்தமாக சுமார் 4.94 லட்சம் பயனாளிகள் பயனடைவார்கள்.
குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம்,
-
இரத்தசோகை (Anaemia) தடுக்கப்படுகிறது
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
-
குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது
-
அறிவுத் திறன் மேம்படுகிறது
-
உடல் வளர்ச்சி சிறப்பாக அமைகிறது
இந்தப் பணிகளில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, உயர் கல்வித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் குடற்புழு நீக்க நாளில் அல்பெண்டசோல் மாத்திரையை கட்டாயம் உட்கொள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், திட்டம் சிறப்பாக நடைமுறைக்கு வர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)