தருமபுரி | பிப்ரவரி 13:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaning Training Courses) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தகுதிகள்:
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வித்தகுதி
வயது: 18 முதல் 35 வரை
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்குள்
பயிற்சி விவரம்:
கால அளவு: 90 நாட்கள்
பயிற்சி நடைபெறும் இடம்: இராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள்
தங்கும் வசதி, உணவு மற்றும் பயிற்சி செலவுகள் – தாட்கோவால் ஏற்கப்படும்
வேலை வாய்ப்பு:
பயிற்சி முடித்த தகுதியான நபர்கள், பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)