Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் மீன்வளம் – நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மானியம், கல்வி உதவி, மீன்பண்ணை அமைப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி | பிப்ரவரி 13:


தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், PMMSY, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் (NADP), தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம்-2, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மீன்வள வளர்ச்சிக்கும், மீனவர்களின் நலனுக்கும் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


PMMSY (2020-21)

  • 3.5 ஹெக்டேரில் புதிய மீன்பண்ணை அமைக்க 10 பயனாளிகளுக்கு ரூ.10.42 லட்சம் மானியம் மற்றும் ரூ.6.44 லட்சம் உள்ளீட்டு மானியம்.

  • மறுசுழற்சி முறையில் நன்னீர் மீன்வளர்ப்பு மேற்கொள்ள ஒரு பயனாளிக்கு ரூ.4.12 லட்சம்.

  • 40 பயனாளிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் – ரூ.17.69 லட்சம்.

  • 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் – ரூ.3.60 லட்சம்.


தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் (NADP)

  • பண்ணைக்குட்டைகளில் பாலித்தீன் உறையிட்டு மீன்வளர்ப்பு – 7 பயனாளிகளுக்கு ரூ.4.59 லட்சம்.

  • விரால் வளர்ப்பு ஊக்குவிப்பு – 4 பயனாளிகளுக்கு ரூ.1.16 லட்சம்.

  • இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பு – 4 பயனாளிகளுக்கு ரூ.0.97 லட்சம்.


மாநில அரசுத் திட்டங்கள்

  • பல்நோக்கு பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு – 24 பயனாளிகளுக்கு 50% மானியம் ரூ.4.32 லட்சம்.

  • உள்நாட்டு மீனவர்களுக்கு பரிசல், வலைகள், உபகரணங்கள் வழங்கல் (2023-24, 2024-25) – பல்வேறு கட்டங்களில் ரூ.3.90 லட்சம், ரூ.5.00 லட்சம், ரூ.1.85 லட்சம், ரூ.2.00 லட்சம்.

  • 2025-26ஆம் ஆண்டில் 200 எக்டேரில் 4,00,000 மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல்.


தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம்-2

  • மடித்து எடுக்கக்கூடிய தொட்டிகளில் மீன்வளர்ப்பு – 5 பயனாளிகளுக்கு ரூ.11.00 லட்சம் மானியம்.


பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம்

  • புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் – ரூ.13.75 லட்சம் (2022-23), ரூ.11.00 லட்சம் (2023-24).

  • குளிர்காப்பு பெட்டியுடன் இருசக்கர வாகனம் – 12 பயனாளிகளுக்கு ரூ.9.08 லட்சம்.

  • சிறிய அளவிலான பயோபிளாக் அலகு – 1 பயனாளிக்கு ரூ.7.50 லட்சம்.

  • காவேரி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் 3.00 லட்சம் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (2025-26).


கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள்

  • மீனவர் குழந்தைகளுக்கு கல்வி உதவி – 39 பேருக்கு ரூ.0.799 லட்சம்.

  • திருமண உதவி – ரூ.0.21 லட்சம்.

  • இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி – 15 பேருக்கு ரூ.4.22 லட்சம்.


உற்பத்தி சாதனைகள்

ஒகேனக்கல் அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் 2024-25ஆம் ஆண்டில் 125 இலட்சம் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒகேனக்கல், பஞ்சப்பள்ளி சின்னாறு மற்றும் தொப்பையாறு பண்ணைகளில் 2021-22 முதல் 2024-25 வரை 62.50, 64.50, 40.01 மற்றும் 43.42 இலட்சம் மீன்குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.


மொத்தத்தில், மீன்வள வளர்ச்சி மற்றும் மீனவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு மானியங்கள், உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies