தருமபுரி | பிப்ரவரி 10:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், திருமணமாகாத ஏழை மகளிர் ஓய்வூதியம், விதவைத் தாய்மார்களுக்கான ஓய்வூதியம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான ஓய்வூதியம் என மொத்தம் 58,627 நபர்களுக்கு ரூ.493.64 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களின் முன்னேற்றம் மற்றும் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம், வயோதிக காலத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் பொருளாதார பாதுகாப்பை வழங்கவும் அரசு மேற்கொள்ளும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். அரசு வழங்கும் ஓய்வூதியத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திட்ட வாரியாக வழங்கப்பட்ட ஓய்வூதிய விவரம்:
-
தேசிய முதியோர் ஓய்வூதியம்: 32,804 நபர்களுக்கு ரூ.213.13 கோடி
-
ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்: 2,594 பெண்களுக்கு ரூ.16.68 கோடி
-
ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள்: 11,497 நபர்களுக்கு ரூ.91.40 கோடி
-
50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை மகளிர்: 499 பேருக்கு ரூ.3.17 கோடி
-
ஆதரவற்ற விதவைத் தாய்மார்கள்: 8,921 பேருக்கு ரூ.56.73 கோடி
-
முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம்: 2,121 நபர்களுக்கு ரூ.112.41 கோடி
-
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள்: 191 நபர்களுக்கு ரூ.12.32 இலட்சம்
இதன் மூலம், கடந்த நான்கரை ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மொத்தம் 58,627 நபர்களுக்கு ரூ.493.64 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)