Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி | பிப்ரவரி 03 :


தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் 2025–2026 ஆம் நிதியாண்டில் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளதாக ரெ.சதீஸ், மாவட்ட ஆட்சித் தலைவர் (இ.ஆ.ப.) அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தப் போட்டிகள் 5–8, 9–12 மற்றும் 13–16 வயது பிரிவுகளில் மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படுகின்றன. குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் 9–12 மற்றும் 13–16 வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். மாநில போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் பாராட்டு தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்.


மாவட்ட அளவிலான இந்த கலைப்போட்டிகள், தருமபுரி மாவட்டம் அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில், 14.02.2026 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9.15 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.


போட்டி விதிமுறைகள் :

  • குரலிசை: கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டும் அனுமதி. திரைப்பட, மேற்கத்திய, பிறமொழி மற்றும் குழுப் பாடல்கள் அனுமதியில்லை. (3–5 நிமிடங்கள்)

  • நாட்டுப்புற நடனம்: தமிழக பண்பாட்டை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் மட்டும். திரைப்பட நடனங்கள் (கிராமிய இசை தவிர) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. (3–5 நிமிடங்கள்)

  • பரதநாட்டியம்: பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்றவை அனுமதி. மேற்கத்திய, திரைப்பட, குழு நடனங்கள் அனுமதியில்லை. (3–5 நிமிடங்கள்)

  • ஓவியம்: 40 x 30 செ.மீ அளவிலான ஓவியத் தாள் மட்டுமே. தேவையான அனைத்து உபகரணங்களையும் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். குழு ஓவியங்களுக்கு அனுமதியில்லை. தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.


போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0427-2386197 அல்லது 94865 23986 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies