தருமபுரி | பிப்ரவரி 08:
தருமபுரி நெசவாளர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சுபமுகூர்த்த கால் நடுதல் மற்றும் கங்கணம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாலிகை ஊர்வலம், மகா தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசத்திற்கு ஊற்றி குடமுழுக்கு நன்னீராட்டு விழாவுடன் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இந்த மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை மனுர்குல தெலுங்கு தேவாங்கர் சமூகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Permalink:
.gif)

