Type Here to Get Search Results !

தருமபுரி சனத்குமார் நதி ரூ.62 கோடி மதிப்பில் கால்வாய் புனரமைப்பு பணி துவங்கப்பட்டது.


தருமபுரி, பிப்.20:
 


தருமபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை துணை நதிகளில் முக்கியமானதாக விளங்கும் சனத்குமார் நதியின் கால்வாய் புனரமைப்பு பணி இன்று துவங்கப்பட்டது.


சனத்குமார் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியாக வத்தல்மலை அடிவாரம் மற்றும் பதிகால்பள்ளம் வனப்பகுதி இருந்து வருகிறது. மலைப்பகுதி அடிவாரத்தில் இருந்து வரும் நீர் பெரிய ஏரி, அதியமான் கோட்டை ஏரி, மாதேமங்கலம் ஏரி, ஏமக்குட்டியூர் வழியாக இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்கிறது. பின்னர் தருமபுரி நகரம் அன்னசாகரம் வழியாக கம்பைநல்லூர் சென்று இருமத்தூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.


நதியின் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாக்கடை கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். கால்வாய்களை அகலப்படுத்தி தூர்வாருவதற்கும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையைத் தொடர்ந்து ரூ.62 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், Exnora International மற்றும் Aadhi Foundation இணைந்து சனத்குமார் நதி புனரமைப்பு பணியை அன்னசாகரம் பிரிவு சாலையில் துவக்கி வைத்தனர். பணியை தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் தன்னார்வலர் ஆதிமூலம், மருத்துவர் அசோகன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies