தருமபுரி, பிப்.20:
தருமபுரியில் கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தின் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், அன்னதானம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் பயிலும் மாணவர்களுக்கு டீ-ஷர்ட் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய அரசு இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் Ministry of Youth Affairs and Sports கீழ் செயல்படும் My Bharat Kendra சார்பில், சமீபத்தில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட இளைஞர் அலுவலர்களாக பதவியேற்க உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இரத்த அழுத்தம் (BP), இரத்த சர்க்கரை அளவு, ECG, TB மற்றும் கண் பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பிடமனேரியில் அமைந்துள்ள Rotary Vivekananda School for the Hearing Impaired பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் பயிலும் மாணவர்களுக்கு டீ-ஷர்ட்கள் வழங்கப்பட்டன. மேலும், அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)