Type Here to Get Search Results !

தருமபுரியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை கூட்டமைப்பு மறியல் போராட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் கைது.


தருமபுரி | பிப்ரவரி 11:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், தொகுப்பூதிய நியமன முறையை கைவிட்டு நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தில் நிலஅளவையர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட வருவாய் துறை கூட்டமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies