Type Here to Get Search Results !

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் – மதிமுக கோரிக்கை.


தருமபுரி | பிப்ரவரி 11:


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தருமபுரி மாவட்ட செயலாளர் கோ. இராமதாஸ், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்து, பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


மனுவில் குறிப்பிடப்பட்டதாவது: தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தருமபுரி – பென்னாகரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த 5ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது.


இதன் காரணமாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், மத்தூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியதோடு, நகராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நான்கு ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


இதனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளை தற்காலிகமாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல்,

  • பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றி விரிவாக்கம் செய்ய வேண்டும்.

  • தேவையெனில் இரு அடுக்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

  • அரசின் தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தி, அரசின் முழு கட்டுப்பாட்டில் பேருந்து நிலையத்தை கொண்டு வந்து, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில பேருந்துகளையும் அங்கிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


என்ற கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன.


இந்த நிகழ்வின்போது மாவட்ட பொருளாளர் சி. கிருபானந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் மொ. குமரவேல், தருமபுரி நகர செயலாளர் செ. பட்டுசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் காந்தி, சரவணன், சிவராமன், மாணவரணி சங்கர், மகளிரணி சுதா சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies