Type Here to Get Search Results !

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27ஆம் தேதி நடைபெறும். – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, பிப். 20:
 


தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.02.2026 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அதியன் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.


தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக முன்வைத்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


விவசாய உற்பத்தி, பாசன வசதி, மானியத் திட்டங்கள், காப்பீடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies