தருமபுரி | பிப்ரவரி 11:
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறை சார்பில் இரண்டு நாள் நாடகக் கலை தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இந்த பட்டறையில் ஜமால் முகமது கல்லூரி, திருச்சி ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் முகமது உமர் பாரூக் மற்றும் காதர் மைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம் ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் திரு. முகமது கலித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர்.
ஆங்கிலத் துறை மாணவர்கள் தங்களுக்குள் உள்ள நாடக நடிப்புத் திறனை வெளிக்கொணர பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக,
-
நாடகத்தில் நடிப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய உடல் அசைவுப் பயிற்சிகள்
-
குரல் கட்டுப்பாடு மற்றும் ஒலியியல் பயிற்சிகள்
-
மேடை நடத்தையின் நுணுக்கங்கள்
போன்ற பல்வேறு திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
பயிற்சியின் நிறைவாக, மாணவர்கள் Julius Caesar என்ற ஷேக்ஸ்பியர் நாடகத்தின் ஒரு பகுதியை மேடையேற்றி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கோவிந்தராஜ் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆங்கிலத் துறை உதவி பேராசிரியரும் நிகழ்வு அமைப்பாளருமான முனைவர் கிருத்திகா, பயிற்சி பட்டறையின் நோக்கத்தை விளக்கி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மேற்கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)