தருமபுரி | பிப்ரவரி 10:
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மாவட்ட பாரதிய ஜனதா மகளிர் அணி ஏற்பாட்டில், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதாக குற்றம்சாட்டி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவின் கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, எஸ்.ஆர். வெற்றிவேல், பூக்கடை ரவி, அசோகன், டி.கே. ராஜேந்திரன், எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். மேலும், பாஜக மாவட்ட மகளிரணி தலைவி கலையரசி, மாநிலச் செயலாளர் ராதிகா, பொதுச் செயலாளர்கள் பிரவீன், சங்கீதா, கணேசன், ஓபிசி மாவட்ட தலைவர் சசிகுமார், தருமபுரி நகர தலைவர் சாய் ஆறுமுகம், பொதுச் செயலாளர்கள் பிரபாவதி, புனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)