Type Here to Get Search Results !

நல்லம்பள்ளி அடுத்த கோவிலூர் புனித அருளப்பர் பள்ளியில் புதிய நூலகம் திறப்பு; மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.


நல்லம்பள்ளி, பிப்ரவரி 07:


தருமபுரி பில்லர்ஸ் சார்பில், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி–கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள புனித அருளப்பர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் சிறப்பாக, பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரு. வினோத்குமார் அவர்கள், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தின் அவசியம், அறிவு வளர்ச்சியில் நூல்களின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்து, தினசரி வாசிப்பு வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் என வலியுறுத்தினார்.


இந்த நிகழ்வில் JCI தலைவர் திரு. சு. ராம்குமார், செயலாளர் திருமதி. ஸ்டெபி ஷீலா பவுல் சகாயராஜ், பொருளாளர் திரு. சந்தோஷ் சத்ரியன், திட்ட இயக்குனர் திருமதி. ஐஸ்வர்யா, ஃபுட் நிர்வாக இயக்குனர் திரு. சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் JCI உறுப்பினர்களான திரு. முருகன் (ஸ்ரீ அண்ணாமலையார் ரியல் எஸ்டேட்), திரு. விக்னேஷ் (கிரீன் விண்டோஸ்), திரு. ராஜதுரை (தருமபுரி மாஸ்டர் பெயிண்ட்ஸ்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதனுடன் வினிதா, சக்தி, ஏஞ்சல் மேரி உள்ளிட்ட ஆர்வலர்கள், உறவுகள் பவுண்டேஷன் ராமன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கல்வி வளர்ச்சிக்கு வாசிப்பை ஊக்குவிக்கும் இந்நிகழ்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies