Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம் டெல்லி மேலிட பொறுப்பாளர் பங்கஜ் சிங் பங்கேற்று சிறப்புரை.


தருமபுரி | பிப்ரவரி 2, 2026


தருமபுரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கலந்தாய்வு கூட்டம் இன்று (02.02.2026) திங்கட்கிழமை, தருமபுரியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கான டெல்லி மேலிட பொறுப்பாளர் பங்கஜ் சிங் கலந்து கொண்டு, கட்சியின் எதிர்கால தேர்தல் பணிகள், மக்கள் நல அரசியல், அமைப்பு வலுப்படுத்தல் குறித்து விரிவாக உரையாற்றினார்.


கூட்டத்தில் மாநிலத் தலைவர் வசீகரன், மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, மண்டல தலைவர் சரத் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகள், தேர்தல் தயாரிப்புகள் மற்றும் களப்பணிகள் குறித்து உரையாற்றினர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜி. வெங்கடேசன் தலைமையேற்றார். அசோக் உடன் இணைந்து முன்னிலை வகித்தனர். மேலும் அன்புமணி, தனராசு, முனுசாமி, அசோக் சாம்ராஜ், தேவேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


வரவேற்புரை சங்கர், தண்டபாணி, திருமால், லட்சுமணன் மற்றும் பவித்ரா ஆகியோரால் வழங்கப்பட்டது. நிறைவாக டி. சென்னையில், தனசேகரன், முனியப்பன், ஈஸ்வரன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர். கூட்டத்தில் பெருந்திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies