Type Here to Get Search Results !

தருமபுரியில் FITU தொழிற்சங்கம் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி | பிப்ரவரி 12:


தருமபுரி மாவட்ட FITU தொழிற்சங்கத்தின் சார்பில், அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு FITU மாவட்ட பொறுப்பாளர் ஜி. மாதையன் தலைமை தாங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தி நான்கு சட்டங்களாக மாற்றியதை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும்,

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டம் (MGNREGA) தொடர வேண்டும்

  • புதிய திட்டமான VBGRAMG (VB G RAM G) கைவிடப்பட வேண்டும்

  • பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது

  • காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீட்டை ரத்து செய்ய வேண்டும்

  • மின்சார திருத்தச் சட்டம் மற்றும் அணு உலைகளில் அந்நிய முதலீட்டை கைவிட வேண்டும்

  • விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இந்த ஆர்ப்பாட்டத்தில் UCPI மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ரவி, மாவட்ட துணைச் செயலாளர் வை.பை. மாதையன், மாவட்ட பொறுப்பாளர் ஜி. பச்சாகவுண்டர், ராஜகோபால், கபில், குமார், அலமேலு, எத்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர்.


இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட FITU தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies