Type Here to Get Search Results !

தருமபுரி நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.


தருமபுரி – பிப்ரவரி 03:


தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து நான்கு ரோடு வரை அமைதி பேரணி நடத்தப்பட்டது. பின்னர், அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மசெல்வன், மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகா தேவி, நகர துணைச் செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக் கோவிந்தன், திமுக பேச்சாளர் டி.ஏ. ரவி, மாவட்ட கலை இலக்கிய அணி டி.ஏ. குமார், ஒன்றிய செயலாளர்கள் காவேரி, பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும், கட்சி நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் சமூகநீதி, திராவிடச் சிந்தனைகள் மற்றும் மக்களாட்சிக் கொள்கைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies