தருமபுரி – பிப்ரவரி 03:
தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் நகர திமுக சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, அரூர் நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் நடைபெற்றது. அரூர் ரவுண்டானாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சித் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யா D. தனபால், அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் R. வேடம்மாள் (Ex.MLA), அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. சந்திரமோகன், அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வே. செளந்தரராசு, அரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சி. தென்னரசு, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் S. சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், கட்சி நிர்வாகிகள் S. ராஜேந்திரன், C. கிருஷ்ணகுமார், S. கலைவாணி, ஓவியர்குப்பன், கு. தமிழழகன், சிட்டிபாபு, A. சண்முகம், ப. செந்தாமரைகண்ணன், CM. சேகர், ஜெய்லூப்தீன், ST. மதியழகன், ராமகிருஷ்ணன், Er. சென்னகிருஷ்ணன், P.V. சேகர், K. மதி, தீ. வின்னரசன், திருநாவுகரசு, கமலக்கண்ணன், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணாவின் திராவிடச் சிந்தனைகளையும், சமூகநீதி கொள்கைகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனுடன் சார்பு அணி பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், BLA-2, BLC, BDA, முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றி மரியாதை செலுத்தினர்.
.gif)

.jpg)