தருமபுரி – பிப்ரவரி 03:
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்து, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் அசோகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதி சிந்தனைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
.gif)

.jpg)