Type Here to Get Search Results !

பொ. மல்லாபுரம் விடிவெள்ளி நகரில் 100 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த வழிப்பாதை மூடல்; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.


பொம்மிடி | பிப்ரவரி 03, 2026:


தருமபுரி கிழக்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொ. மல்லாபுரம் விடிவெள்ளி நகர் பகுதியில், தொடர்வண்டிப்பாதை அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வழிப்பாதையை இந்திய இரயில்வே துறை (பொம்மிடி ரயில்வே நிர்வாகம்) சமீபத்தில் கேட் அமைத்து மூடியுள்ளது.


இந்த பாதையை நம்பி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வந்த நிலையில், திடீரென பாதை மூடப்பட்டதால் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. மாற்றுப் பாதைகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஊர் மக்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,

  • ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது,

  • ரயில்வே மேலாளரை நேரில் சந்தித்து முறையிடுவது,

  • பொதுமக்கள் பயன்படுத்தும் வழிப்பாதையை மீண்டும் திறக்க வலியுறுத்துவது


என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டில் நீண்ட காலமாக இருந்த வழிப்பாதையை மாற்று ஏற்பாடுகள் இன்றி மூடுவது நியாயமற்றது என்றும், உடனடியாக உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies