Type Here to Get Search Results !

சி.புதூர் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் திறப்பு விழா ஏபிஜே அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றம் முன்னெடுப்பு.


தருமபுரி | பிப்ரவரி 16


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில், கிராம மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் நோக்கில் ஏபிஜே அக்னி சிறகுகள் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பென்னாகரம் காவல் ஆய்வாளர் பாபு சுரேஷ் திறந்து வைத்தார்.


அவர் பேசுகையில், “கிராம மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இளைஞர்கள் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், தேவைக்கேற்ப மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தி, அனைவரும் பயனடைய வேண்டும்,” என்று தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். மன்றத்தின் தலைவர் நாகராஜ், செயலாளர் சேதுபதி, பொருளாளர் வினோத்குமார் மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், சுரேஷ், சாந்தமூர்த்தி, தங்கதுரை, எழிலன், கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கிராம மக்கள் திரளாக பங்கேற்று இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


கிராம இளைஞர்கள் முன்னெடுத்த இந்த முயற்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies