பென்னாகரம், ஜன.08:
விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளராக கருப்பண்ணன் இரண்டாவது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பண்ணன் மீண்டும் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டதை வரவேற்று, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மாவட்ட செயலாளர் கருப்பண்ணனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்போது, அம்பேத்கார் சிலை அமைந்த இடத்தில் “அம்பேத்கார் வாழ்க!”, “என்றென்றைக்கும் நாங்கள் திருமாவளவனின் தம்பிகள்!” என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு உற்சாகம் வெளிப்படுத்தப்பட்டது. பின்னர், நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாட்டம் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வு, விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

