தருமபுரி, ஜன.04:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழி குழுத் தலைவர் தி. வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வருகின்ற 07.01.2026 (புதன்கிழமை) வருகை புரிந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்று முற்பகலில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில், 2024–26 ஆம் ஆண்டுக்கான நிலுவையில் உள்ள மற்றும் நிறைவேற்றப்பட்ட அரசு உறுதிமொழிகளின் பணிகள் குறித்து விரிவான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்தில், அரசு உறுதிமொழிகளின் செயல்பாட்டு நிலை, நிறைவேற்றத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் நிலுவை காரணங்கள் குறித்து துறை வாரியாக விவாதிக்கப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்று விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
.gif)

.jpg)