தருமபுரி, ஜன.05:
தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில், தருமபுரி இலக்கியம்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த முகாமில், எச்.ஐ.வி./ஏட்ஸ் குறித்த விழிப்புணர்வு, புகையில்லா தமிழகத்தை உருவாக்கும் அவசியம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவிகள் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினர். மாணவிகளின் இந்த முயற்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளை அவர் பாராட்டி, சமூக நலன் சார்ந்த இத்தகைய பணிகளில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என ஊக்கமளித்தார்.
மேலும், இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

.jpg)