தருமபுரி, ஜன. 06:
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறையில், “Post Structuralism and Deconstruction: Gateways to Textual Reading” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை தியாகராஜர் கல்லூரி ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், இலக்கிய நூல்களை கோட்பாட்டு (theory-based) அணுகுமுறையில் எவ்வாறு வாசிக்க வேண்டும் என்பதையும், போஸ்ட் ஸ்ட்ரக்சரலிசம் மற்றும் டிகன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய கோட்பாடுகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவற்றை இலக்கியப் படைப்புகளில் பொருத்திப் புரிந்துகொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தெளிவாக விளக்கினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் விரிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்.
முன்னதாக, ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொ) முனைவர் எம். செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறைத் தலைவருமான முனைவர் வி.சி. கோவிந்தராஜ் தொடக்க உரையாற்றினார். துறை உதவி பேராசிரியை முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி பிரபாவதி அனைவரையும் வரவேற்றார். மாணவன் புகழேந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். இறுதியில் முதலாம் ஆண்டு மாணவி செல்வி நிவேதா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மீனா மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

.jpg)