Type Here to Get Search Results !

பென்னாகரம் வட்ட கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் மேம்பாடு கோரி BSNL-க்கு முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன் மனு.


பென்னாகரம், ஜன.03:


பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட முத்துக்கம்பட்டி, சின்னூர், சீலநாயக்கனூர், மேட்டூர்கொட்டாய், சக்கில்நத்தம், கோடுபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலவும் கடுமையான மொபைல் நெட்வொர்க் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, புதிய BSNL மொபைல் கோபுரம் அமைக்கவும், தற்போதுள்ள நெட்வொர்க் வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன், தருமபுரி BSNL பொதுமேலாளருக்கு மனு அளித்துள்ளார்.


அந்த மனுவில், மேற்கண்ட கிராமங்களில் மொபைல் சிக்னல் மிகவும் பலவீனமாக இருப்பதால், அடிக்கடி அழைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், நம்பகமான மொபைல் டேட்டா சேவை கிடைக்காத நிலை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் கட்டணங்கள், அரசு சேவைகள், அவசர தகவல் தொடர்பு மற்றும் வணிக நடவடிக்கைகள் போன்ற அடிப்படை தேவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், தற்போது உள்ள BSNL நெட்வொர்க் கட்டமைப்பு பொதுமக்களின் அதிகரித்து வரும் தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களில் புதிய மொபைல் கோபுரம் அமைப்பதோடு, அல்லது ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை மேம்படுத்தி மொபைல் சிக்னல் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


பொது சேவை மனப்பான்மையுடன் செயல்படும் நிறுவனமாக BSNL, கிராமப்புற மக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies